» சினிமா » செய்திகள்

ஒரு கோடிக்கும் மேல் வரி செலுத்தியுள்ளேன் : நடிகை அமலாபால் விளக்கம்

வியாழன் 2, நவம்பர் 2017 7:48:35 PM (IST)

நடப்பு ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் வரி செலுத்தியுள்ளதாக நடிகை அமலாபால் விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரியில் நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்ரக பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 1.5 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ. 23 லட்சம் வரை வரி கட்ட வேண்டும். புதுச்சே ரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூ. 1.5 லட்சம் வரை வரி கட்டி விட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.இதனால் அவர் வரிஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

அமலாபால் கார் வாங்கியதில் விதிமுறை மீறல் இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.இந்நிலையில் தன்மீதான புகார்கள் குறித்து அமலாபால் தெரிவிக்கும் போது, கார் வாங்கியது தொடர்பாக என்னை பற்றி வீண் வதந்திகள் பரப்பப்படுகிறது.இது அர்த்தமற்றது. நான் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் வரி செலுத்தியுள்ளேன் குறுகிய நோக்கில் சின்னசின்ன ஆதாயங்களுக்காக சட்டப்படி நடக்கும் இந்தியர்களுக்கு தொல்லை அளிப்பதை விட்டு விட்டு நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல்,கல்வியறிவின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து ஏற்றத்தாழ்வுகளை களைவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory