» சினிமா » செய்திகள்

சென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது: கமல்ஹாசன் எச்சரிக்கை

வியாழன் 2, நவம்பர் 2017 8:51:45 AM (IST)

சென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது. வருமுன் காப்போம், நித்திரை கலைப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது அரச்சுக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முன் அறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரம் ஆகாது.

நீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்து பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை. நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கும் நீர் வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015–ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரல் எழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவவேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory