» சினிமா » செய்திகள்

விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அமலாபால்

புதன் 1, நவம்பர் 2017 8:51:10 PM (IST)சொகுசு காரை புதுவையில் பதிவு செய்த விவகாரத்தில் தன்னை விமர்சித்தவர்களை மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அமலாபால்.

நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ‘பென்ஸ் எஸ்’ ரக வெளிநாட்டு சொகுசு காரை ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த காரை புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து அங்குள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அதே காரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்து நிகழ்ச்சிகளுக்கு அந்த காரில் சென்று வந்துள்ளார். புதுச்சேரியில் காரை பதிவு செய்ய அமலாபால் கொடுத்தது போலி முகவரி என்று குற்றச்சாட்டு எழுந்தது. கேரளாவில் காரை பதிவு செய்தால் 20 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும் என்றும் அதை தவிர்ப்பதற்காக புதுவையில் காரை பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இதுபோல் மலையாள நடிகர்கள் பஹத்பாசில், சுரேஷ்கோபி ஆகியோரும் புதுவையில் சொகுசு காரை பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:"இந்த நேரத்தில் எனக்கு அவசியமாக இருப்பது வேடிக்கையான நகர வாழ்க்கையில் இருந்தும் தேவையற்ற யூகங்களில் இருந்தும் வெளியே வருவதுதான். அதற்காக இப்போதைக்கு படகு பயணம் செல்ல விரும்புகிறேன். அது சட்டத்தை மீறி விட்டேன் என்ற குற்றச்சாட்டாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுவும் சட்டமீறலா என்று நண்பர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?”இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory