» சினிமா » செய்திகள்

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இயக்குநர் மகேந்திரன‌

வியாழன் 20, ஏப்ரல் 2017 7:39:44 PM (IST)

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகவுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இயக்குநர் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கூட்டணியான‌ பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து சீதக்காதி என்ற படத்தில் பணிபுரியவுள்ளார்கள். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 25 படமாக சீதக்காதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 24ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதில் மேடைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்த மேடைக் கலைஞரின் வாழ்க்கை பயணமாக இப்படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகி கிடையாது. ஆனால், இதில் பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்கள்.

இதில் விஜய் சேதுபதியோடு நடிக்க அர்ச்சனா மற்றும் மெளலி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள ஒரு பக்க கதை படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து, வெளியீட்டு தயாராகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory