» சினிமா » செய்திகள்

விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் துவக்கம்

வியாழன் 20, ஏப்ரல் 2017 7:29:52 PM (IST)



விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. இந்தாண்டுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

விஸ்வரூபம் வெளியான உடனே, விஸ்வரூபம் 2 படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.விஸ்வரூபம் 2 படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன.

ஆனால் விஸ்வரூபம் 2 வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இதனால் விரைவில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர இறுதிகட்ட பணிகள் துவங்கும் என தெரிவித்தார்கள்.

இந்நிலையில், நேற்று முதல் விஸ்வரூபம் 2 படத்தில் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் தொடங்கியுள்ளது படக்குழு. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது. விஸ்வரூபம் 2 முடித்துவிட்டு, சபாஷ் நாயுடு பணிகளை கமல் துவங்குவார் என தெரிகிறது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory