» சினிமா » செய்திகள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் 2 பாகங்களாக வெளியீடு

வியாழன் 20, ஏப்ரல் 2017 7:22:10 PM (IST)

அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜூன் 23-ம் தேதி முதல் பாகம் வெளியாகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. 3 தோற்றங்களில் மதுரை மைக்கேல் தோற்றம் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் தாத்தா தோற்றத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெறவிருந்த தாய்லாந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அக்காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

ஜூன் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளதால், எடிட்டிங் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory