» சினிமா » செய்திகள்

வடசென்னை படத்தில் அமலாபாலுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 19, ஏப்ரல் 2017 6:53:28 PM (IST)

வடசென்னை திரைப்படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் கதாநாயகி இத்துடன் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக சமந்தா நடிப்பதாக அறிவிக்கபட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவர் விலக, அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அமலா பாலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ளதால் அவரும் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.இது குறித்து விளக்கமளித்த படக்குழு, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களின் பணிகள் இருப்பதால் அமலா பால் வடசென்னையில் இருந்து விலகியுள்ளார். 

வடசென்னை படப்பிடிப்புக்காக திட்டமிட்ட தேதிகளுடன் அமலா பாலின் தேதிகள் ஒத்துப்போகாததால் அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதில் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா ஏற்கனவே தனது படப்பிடிப்பை துவங்கி விட்டார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை திரைப்படம் வடக்கு சென்னையின் சேரி பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory