» சினிமா » செய்திகள்

ஸ்ருதிக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்

புதன் 19, ஏப்ரல் 2017 6:38:43 PM (IST)

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்தை மீண்டும் துவக்க பிசி ஸ்டார் ஸ்ருதிஹாசனுக்காக காத்திருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு கமல்கிஹாசன் காலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது உடல்நலம் தேறியுள்ள கமல்ஹாசன், படத்தின் பணிகளை மீண்டும் துவங்க நினைத்தாலும் பல்வேறு சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே செல்கிறது.

ஜனவரி மாதமே இப்படத்தின் பணிகள் துவங்கப்படும் என்று அறிவித்த நிலையில், புதிய அமெரிக்க அதிபரின் விசா உத்தரவினால், படக்குழுவினர் விசா பெறுவதில் சிக்கல் நிலவியது. அதைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு படக்குழு தற்போது மீண்டும் களத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சமீபத்தில் பேசிய கமல்ஹாசன், திரைப்படத்தின் சில காட்சிகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்க வேண்டியுள்ளது. அதில் இந்திய மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார். மேலும், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என படு பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் எனக்கும் இடையிலான காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளது. அவருக்காக காத்திருப்பதாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory