» சினிமா » செய்திகள்

வாழ்க்கை வரலாறு படத்தை வாழ்த்திய ரஜினிக்கு சச்சின் நன்றி..!!

புதன் 19, ஏப்ரல் 2017 4:07:07 PM (IST)

தனது வாழ்க்கை வரலாறு படமான "சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்" படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ் என்ற திரைப்படம் மே 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இதன் வெற்றிக்கு தனது டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளி வருகிறது. இதேபோல கடந்தாண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் திரைப்படம் திரைக்கு வந்திருந்தபோதும், சென்னையில் ரஜினியை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இல்லத்தில் வைத்து தோனி நேரடியாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory