» சினிமா » செய்திகள்

இயக்குநர் மணிரத்னம் வீட்டு முன் தற்கொலை செய்வேன் : லைட்மேன் மிரட்டல்

திங்கள் 17, ஏப்ரல் 2017 6:17:04 PM (IST)

தனக்கு இழப்பீடு வழங்காவிட்டால், இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு முன்னர் தற்கொலை செய்து கொள்வேன் என லைட் மேன் ஒருவர் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கிய குரு திரைப்படத்தில் லைட் மேனாக மணிமாறன் என்பவர் பணியாற்றி யுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மணிமாறனுக்கு ரத்தம் தொடர்பான தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். 

அப்போது மருத்துவமனை செலவுகளை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். எனவே தனக்கு நிதியுதவி அளிக்குமாறு இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இருதரப்பினரும் மணிமாறனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு லைட்மேன் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மணிமாறன் வழக்கு தொடுத்தார். அதில் மணிமாறனுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனாலும் லைட் மேன் சங்கம், அவருக்கான நிவாரண உதவியை தற்போது வரை செய்யவில்லை. இந்நிலையில் தனக்கு குரு படத்தில் பணியாற்றிய போதுதான் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், எனவே தனக்கு இயக்குநர் மணிரத்னம் நிவாரண உதவி செய்யவில்லை எனில், அவர் வீட்டின் முன்னர் தீக்குளிக்க உள்ளதாகவும் மணிமாறன் மிரட்டல் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory