» சினிமா » செய்திகள்

தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி நடிக்கும் படம் : விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஞாயிறு 16, ஏப்ரல் 2017 12:24:46 PM (IST)

கபாலி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் வுண்டர்பார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மே மாதம் முதல் துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 2.0 படத்தில் நடித்து வரும் ரஜினி அது முடிந்ததும் இப்படத்தில் நடிக்கிறார்.இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்து வருகிறார். சேரி பகுதியின் பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாலிவுட் பிரபல நடிகை வித்யாபாலன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கபாலியில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப குழு இந்த படத்திலும் பணியாற்றவுள்ளனர். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிய வாய்ப்புள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory