» சினிமா » செய்திகள்

நடிகை, உதவி இயக்குநர்களை தேடும் பிரேமம் பட இயக்குநர்

ஞாயிறு 16, ஏப்ரல் 2017 11:16:48 AM (IST)

தான் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு நடிகை மற்றும் உதவி இயக்குநர்கள் தேவை என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து ஒரு தமிழ் படத்தை இயக்க இருக்கிறார். அதற்காக தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகை மற்றும் உதவி இயக்குநர்கள் தேவை என்று பதிவிட்டுள்ளார். வித்தியாசமான முறையில் குறிப்பிட்டுள்ள பதிவில்  இந்த வாட்டி படத்தில் நடிக்க பாட்டு பாடவும், நடிக்கவும் தெரிஞ்ச பொண்ணை தேடுகிறோம். கர்னாடிக் மியூசிக் தெரிஞ்சா சந்தோஷம். ஏன்னா எங்களுக்கு தெரியாது. 

வயது 16- 26. 1 பையன், 1 பொண்ணு என இரண்டு உதவி இயக்குநர்கள் தேவை. தமிழ் நல்லா தெரியணும், தங்கிலீஷ், இங்கிலீஷ் புரியற ஆளா இருக்கணும். அது தான் நாங்க கேக்குற குவாலிட்டி என்று குறிப்பிட்டுள்ளார். வேறு யார் படத்தில் பணியாற்ற உள்ளார்கள் என்று பின்னர் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory