» சினிமா » செய்திகள்

இறவாக்காலம் : மாயா இயக்குநர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

சனி 15, ஏப்ரல் 2017 8:20:43 PM (IST)

மாயா இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு இறவாக்காலம் என பெயரிட்டுள்ளார்கள்.

நயன்தாரா, ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2015-ம் ஆண்டு வெளியான படம் மாயா. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி வெற்றியடைந்த முதல் படம் இதுவாகும். இப்படத்தைத் தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் இருவரும் நடிக்க புதிய படமொன்றை இயக்கி வருகிறார் அஸ்வின். முழுக்க காதலை மையப்படுத்தி பயணிக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பெயர் உள்ளிட்டவை ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

இப்படத்தை தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்து வருகிறார். மேலும் இறவாக்காலம் என்று படத்துக்கு தலைப்பிட்டுள்ளார்கள். மாயா படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யோஹன், இப்புதிய படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory