» சினிமா » செய்திகள்

தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் ப.பாண்டி

சனி 15, ஏப்ரல் 2017 6:28:17 PM (IST)

தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி திரைப்படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள ப.பாண்டி திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் ப.பாண்டி படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கு ரீமேக்கில் ராஜ் கிரண் கதாபாத்திரத்தில், நடிகர் மோகன் பாபு நடிக்க உள்ளார். மேலும் பிரசன்னா நடித்த கதாபாத்திரத்தில், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ப.பாண்டி படத்தை பார்த்த ரஜினிகாந்த், அந்த படம் குறித்து தனது நண்பரான மோகன்பாபுவிடம் புகழ்ந்து பேசியுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு நடிக்கலாம் என சூப்பர் ஸ்டாரே ஆலோசனையும் அளித்துள்ளார். மேலும் மோகன்பாபுவுக்காக ப.பாண்டி படத்தின் பிரத்யேக காட்சிக்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் .இதனைத் தொடர்ந்து ப.பாண்டி படத்தை பார்த்த மோகன்பாபு, அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory