» சினிமா » செய்திகள்

லீக்கான அஜித்57 ஷூட்டிங்ஸ்பாட் ஸ்டில்ஸ் : ஷாக் ஆன படக்குழு

புதன் 11, ஜனவரி 2017 8:55:36 PM (IST)
இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்களால் அஜித் 57 படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

வீரம், வேதாளம் படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விவேக் ஒபராய்,காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கிவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள படப்பிடிப்பு தளப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனென்றால், அப்புகைப்படங்கள் மூலமாக இப்படம் தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் பரவிவருகிறது. மேலும், அப்புகைப்படங்களும் வைரலாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகும். பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது, இவ்வாறு வெளியாகியிருப்பதால் எப்படி வெளியானது என படக்குழு விசாரிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

ஏப்ரல் வெளியீடாக இருந்த இப்படம், தற்போது ஜுன் வெளியீடாக மாற்றி அமைத்துள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கயுள்ளது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory