» சினிமா » செய்திகள்

விக்ரமின் துருவநட்சத்திரம் : அனுஇம்மானுவேல் ஒப்பந்தம்

புதன் 11, ஜனவரி 2017 8:44:11 PM (IST)


கவுதம் மேனன் - விக்ரம் இணையும் துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி இணைப்பில் துருவ நட்சத்திரம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

தற்போது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் நாயகிக்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டையின்மண்ட் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory