» சினிமா » செய்திகள்

தவறாக நடக்க முயன்ற ஹீரோ: நடிகை பரபரப்பு புகார்

செவ்வாய் 10, ஜனவரி 2017 5:04:12 PM (IST)

தன்னிடம் ஹீரோ ஒருவர் தவறாக நடக்க முயன்றார் என நடிகை வேதா அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். 

சமீபகாலமாக ஹீரோயின்கள் சிலர் தங்களது அனுபவங்களை வெளிப்படையாக சொல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்படுகிறது. தமிழில் அகரம், வேகம், கருப்பம்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் வேதா. தெலுங்கில் பவுர்ணமி, பாண்டுரங்கடு உள்ளிட்ட ஏராளமான படங்களில் அர்ச்சனா என்ற பெயரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் ஆந்திர பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னிடம் ஹீரோ ஒருவர் தவறாக நடக்க முயன்றார் என புகார் கூறி அதிர்ச்சி தந்துள்ளார்.

இதுபற்றி வேதா கூறும்போது, ‘படப்பிடிப்பு முடிந்தபிறகு ஒரு நாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஹீரோ, ‘படத்தில் உன்னை நடிக்க வைத்ததற்கு ஈடாக பதிலுக்கு நீ என்ன தருவாய்’ என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டார். ‘உங்களுக்கு நான் ஒன்றும் தரவேண்டியதில்லை’ என்று கூறிவிட்டு உடனே அங்கிருந்த நான் வெளியேறினேன். இதன் விளைவாக குறிப்பிட்ட படத்தில் நான் நடித்த பல காட்சிகள் வெட்டி எறியப்பட்டன’ என்றார். தன்னிடம் தவறாக பேசிய நடிகர் யார், எந்த படத்தில் இச்சம்பவம் நடந்தது என்பதுபற்றி வேதா வெளியிடவில்லை. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory