» சினிமா » செய்திகள்

தனுஷை பிரிந்தது ஏன்? அனிருத் விளக்கம்

செவ்வாய் 10, ஜனவரி 2017 12:20:16 PM (IST)

தனுஷ் - அனிருத் பிரிவுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

சொந்தக்காரப் பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தவர் நடிகர் தனுஷ். ஆனால் சில காலங்களால் தனுஷ் அனிருத்தை தவிர்த்து வருகிறார். சில பல காரணங்களால் தனது படங்களில் அனிருத்தை ஒப்பந்தம் செய்வது இல்லை. தனுஷின் புதிய ஆஸ்தான இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் ஷான் ரோல்டன். தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் பின் தொடர்வதை கூட நிறுத்தினார். 

இந்த பிரச்சனை குறித்து தனுஷும், அனிருத்தும் எதுவும் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் அனிருத் பிரிவுக்கான காரணம் பற்றி பேசியுள்ளார். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாதபோது என்னை நம்பிய ஒரே ஆள் தனுஷ் என அனிருத் கூறியுள்ளார். ஒரு படைப்பாளி அடுத்தடுத்த படங்களில் ஒரே நபரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணியாற்றினால் பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிடும். எனவே, தான் நானும், தனுஷும் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் மீண்டும் ஒன்றாக பணியாற்றுவோம் என அனிருத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory