» சினிமா » செய்திகள்

ஆர்.கே - வடிவேலு மீண்டும் இணையும் நீயும் நானும் நடுவுல பேயும்

சனி 7, ஜனவரி 2017 8:21:13 PM (IST)


அழகர்மலை கூட்டணியான ஆர்.கே - வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு நீயும் நானும் நடுவுல பேயும் எனப் பெயரிட்டுள்ளார்கள்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நீத்து சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.

அப்படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்.கே. நீயும் நானும் நடுவுல பேயும் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தண்ணில கண்டம் பட இயக்குநர் சக்திவேல் இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆர்.கேவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுல்ளார் வடிவேலு. ஆர்.கே - வடிவேலு இணைப்பில் வெளியான அழகர் மலை படத்தின் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory