» சினிமா » செய்திகள்

தர்மதுரை 100வது நாள்: ரஜினிகாந்துக்கு கேடயம்!!

சனி 7, ஜனவரி 2017 3:48:02 PM (IST)



விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு படக்குழு வழங்கியது. 

1991-ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்மதுரை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகிறது இந்தப் படம் வெளியாகி. இந்த நிலையில் அந்தப் படத்தின் தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் சீனு ராமசாமி படம் இயக்கினார். விஜய் சேதுபதி நடித்த இந்த தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100ம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  அளிக்க வேண்டும் என விரும்பினர் படக்குழுவினர். 

அதை மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட ரஜினி, தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரைப் பாராட்டியதுடன், படத்தின் நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினி. விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமூக அக்கறையுள்ள காட்சிகளை விவரித்தும் பாராட்டினார் ரஜினி.வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத் தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷையும் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

"முள்ளும் மலரும் - காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன்," என்றார் இயக்குநர் சீனு ராமசாமி. உண்மையான, ஒரிஜினல் தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தனர் தர்மதுரை படக்குழுவினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory