» சினிமா » செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ்

சனி 7, ஜனவரி 2017 10:55:15 AM (IST)

வெற்றிமாறன்  படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அடங்காதே, 4ஜி, சர்வ தாளமயம், சசி இயக்கும் படம், ரவிஅரசு இயக்கவுள்ள படம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ஸ்ரீக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். 

தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி 2, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படம் ஆகியவற்றில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது கிடைத்திருக்கும் இந்த இடைவெளியை முன்வைத்து, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக வைத்து கதை ஒன்றை தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். அக்கதை பிடித்துவிடவே இருவரும் இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. மார்ச்சில் தொடங்கி ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெற்றிமாறன்  இயக்கத்தில் வெளியான  பொல்லாதவன்,  ஆடுகளம், விசாரணை  உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவருடைய இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory