» சினிமா » செய்திகள்

மும்பை தாக்குதலை மையப்படுத்திய 1818 படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்

புதன் 4, ஜனவரி 2017 8:46:05 PM (IST)


மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் 1818 படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் த்ரிஷா.

சதுரங்க வேட்டை 2, மோகினி, 96 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து ஹேய் ஜுடு என பெயரிடப்பட்ட படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 1818 எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. ரிதுன்சாகர் இயக்கவுள்ள இப்படத்தில் சுமன், ராஜேந்திர பிரசாத், பிரமானந்தம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

மைன்ட் டிராமா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கவுள்ளது படக்குழு. 5 நட்சத்திர ஹோட்டலில் ஒர் இரவில் தவறான தகவலால் பெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறது படக்குழு. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது 1818 படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory