» சினிமா » செய்திகள்

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான மடோனா செபாஸ்டியன்....

புதன் 4, ஜனவரி 2017 8:33:46 PM (IST)


ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

4ஜி, சர்வம் தாளமயம், அடங்காதே உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ப்ரூஸ் லீ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈட்டி படத்தின் இயக்குநர் ரவிஅரசு கூறிய கதை பிடித்துவிடவே, தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.. இப்படத்தின் பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் வெளியீடாக வரவுள்ளது.

இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இதன் நாயகியாக மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தனர். இப்படத்தை ஆரஞ்சு மிட்டாய் மற்றும் றெக்க படங்களின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory