» சினிமா » செய்திகள்

தெறி டீசர் : 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

திங்கள் 4, ஏப்ரல் 2016 7:53:07 PM (IST)விஜய் நடிப்பில் வெளியான தெறி டீசர், இணையத்தில் இதுவரை 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. தணிக்கையில் யூ சான்றிதழைப் பெற்ற இப்படம் வருகின்ற 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தின் டீசர், தற்போது இணையத்தில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான குறைந்த நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்த முதல் டீசர், முதல் நாளில் அதிக பார்வை மற்றும் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையை தெறி தக்க வைத்துள்ளது. 

மேலும் இந்தியளவில் அதிக லைக்குகள் பெற்ற முதல் டீசராகவும் தெறி திகழ்வது குறிப்பிடத்தக்கது.இதுவரை 2,96,645 பேர் இந்த டீசரை தங்களுக்குப் பிடித்திருப்பதாக லைக் செய்துள்ளனர். அதேநேரம் 55,189 இந்த டீசர் தங்களைக் கவரவில்லை என்று டிஸ்லைக் செய்திருக்கின்றனர். தற்போது விஜய் ரசிகர்கள் #10millionviewsfortheriteaser என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ரீத்தா இரத்தின மேரிJan 11, 2017 - 12:33:39 PM | Posted IP 27.62*****

I LIKE TO VIJAY FILMY SO I WISH TO ALL SUCESS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory