» சினிமா » திரை விமர்சனம்

சசிகுமாரின் வெற்றிவேல் திரைவிமர்சனம்

வெள்ளி 22, ஏப்ரல் 2016 6:48:33 PM (IST)

நடிகர்கள் : சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரகனி, தம்பி ராமைய்யா, ரேணுகா

இசை : டி இமான்

ஒளிப்பதிவு : எஸ் ஆர் கதிர்

படத்தொகுப்பு : ஏ எல் ரமேஷ்

தயாரிப்பு : அப்துல் லத்தீப் (ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்)

திரைக்கதை, இயக்கம் : வசந்தமணிகதை :

மணப்பெண் மாறியதால் ஏற்படும் மனப் போராட்டமும், காதல் போராட்டமும் தான் ‘வெற்றிவேல்’ படத்தின் கதை. 

ஊரில் சொந்தமாக உரக்கடை நடத்தி வரும் (வெற்றிவேல்) சசிகுமாரும், விவசாயத் துறை அரசு அதிகாரியாக வரும் மியா ஜார்ஜும் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள்.அதே வேளையில், சசிகுமாரின் தம்பி ஊர் பஞ்சாயத்து தலைவர் பிரபுவின் மகளை காதலிக்கிறார். தம்பியின் காதலுக்காக களமிறங்கும் சசி,(ப்ரெண்ட்ஸ்காகவே போகிறவர் தம்பினா விடுவாரா?) ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணை திருமணம் செய்யும் சூழல் வருகிறது. அந்த சூழலுக்கான காரணமென்ன? சசிகுமாரின் காதல் என்னவாயிற்று? என்பதே "வெற்றிவேல்" படத்தின் மீதிக்கதை.

சசிக்கு ஜோடியாக வரும் மியா ஜார்ஜ் அழகிலும், நடிப்பிலும் கவர்க்கிறார். காமெடிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமைய்யா. மேலும் இளைய திலகம் பிரபு, சமுத்திரகனி,விஜய்வசந்த்,சசிகுமாரின் தாய் தந்தையாக வரும் ரேணுகா,இளவரசு, தம்பியாக வரும் ஆனந்த் நாக் ஆகியோரும் அவரவர் கதாப்பத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.  

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் விதம் உள்ளது. கிராமத்தின் அழகை ஒளிப்பதிவால் ரசிக்கவைக்கிறார் எஸ் ஆர் கதிர். ஏ.எல் ரமேஷின் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.புதுமுக இயக்குனர் வசந்த மணியின் காதல், சண்டை மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ப்ளஸ் : சசியின் கிராமத்து வேடம், சென்டிமெண்ட் காட்சிகள்

மைனஸ் : விக்ரமன் பட கதை மாதிரி இருப்பதாலும், பழைய திரைக்கதையும் தான்

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்ககூடிய வெற்றிவேல் - வீரவேல்..!!!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory