» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் டி20 உலக கோப்பையில் ஆஸி.யிடம் இந்தியா தோல்வி: அரையிறுதி வாய்ப்பு மங்கியது!

திங்கள் 14, அக்டோபர் 2024 5:43:28 PM (IST)



மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோற்றது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. 

பாகிஸ்தான் அணி அதிக ரன்ரேட்டில் நியூசிலாந்தை இன்று வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது: `பவர் பிளேவில் அதிரடியாக ஆடக்கூடிய வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறார்கள். ஆடுகளம் எவ்வாறு இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை மாற்றி அமைத்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது. 

நாங்களும் அதே திட்டத்தில் தான் விளையாடினோம். ஆனால் எங்களுக்கு எதிர் பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிடம் அனுபவம் இருக்கிறது. ஒரே அணியாக இணைந்து பல உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆடி உள்ளனர். இதனால்தான் எப்போதுமே ஆஸ்திரேலியா சிறந்த அணியாக விளங்குகிறது. எங்களுக்கு கிடைத்த சில மோசமான பந்துகளை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை.

நாங்கள் பந்து வீசும் போது பவுண்டரிகள் அதிகம் செல்வதை தடுத்து இருக்க வேண்டும். இந்த போட்டியில் கூட நாங்களும் வெற்றி பெறும் தருவாயில் தான் இருந்தோம். ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியா தங்கள் அனுபவத்தை வைத்து இதுபோன்ற நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற குணங்களை ஆஸ்திரேலியாவிடம் இருந்து எங்கள் வீராங்கனைகள் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது அரையிறுதிக்கு செல்வது என்பது எங்கள் கையில் இல்லை.

நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டோம். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் மகிழ்ச்சி தான். இல்லையென்றால் தகுதியான அணிகள் தான் அரை இறுதிக்கு சென்றிருக்கிறது என்று அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory