» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரோகித் கேப்டன், பும்ரா துணை கேப்டன்: நியூசி. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 12, அக்டோபர் 2024 4:12:03 PM (IST)
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ம் தேதி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியின் விவரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப். ரிசர்வ் வீரர்கள்: ஹர்ஷித் ரானா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா