» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

புதன் 15, மார்ச் 2023 4:17:23 PM (IST)டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முதல் இரு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள். கடைசி டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஏழு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிஷப் பந்த் 9-வது இடத்திலும் ரோஹித் சர்மா 10-வது இடத்திலும் உள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory