» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தொடர்ந்து 4வது முறையாக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா!
திங்கள் 13, மார்ச் 2023 4:26:32 PM (IST)

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் டிரா ஆன நிலையில், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 4வது முறையாக வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128 அக்ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை இன்றும் தொடர்ந்தது. 5-வது நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 36 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. குனேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் டிஆர்எஸ் வழியாக முறையீடு செய்யாமல் கிளம்பினார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட் இல்லை எனத் தெரிந்தது. ஹெட் 45, லபுஷேன் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
அதன்பிறகும் நன்கு விளையாடிய டிராவிஸ் ஹெட், 90 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 78.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 63, ஸ்மித் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதையடுத்து 4-வது டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்து இரு அணிகளும் கைகுலுக்கிக் கொண்டன. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 4வது முறையாக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1685445174.jpg)
ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்: தோனி உருக்கம்
செவ்வாய் 30, மே 2023 4:40:36 PM (IST)

ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி சாம்பியன்
செவ்வாய் 30, மே 2023 9:11:33 AM (IST)

மின்னொளி கபடி போட்டி: கூடங்குளம் அணி வெற்றி
திங்கள் 29, மே 2023 3:18:15 PM (IST)

அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூடெல்லி அணி சாம்பியன்!!
திங்கள் 29, மே 2023 10:19:53 AM (IST)

கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!
சனி 27, மே 2023 10:32:55 AM (IST)

லக்னோவை வெளியேற்றியது மும்பை: குவாலிபயர்-2 ஆட்டத்திற்கு தகுதி!
வியாழன் 25, மே 2023 9:06:15 AM (IST)
