» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்கள்: ரோஹித் சர்மா புதிய சாதனை!
சனி 11, மார்ச் 2023 11:38:03 AM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டிய 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: இந்தியர்கள்
1) சச்சின் - 34357
2) கோலி - 25047
3) டிராவிட் - 24208
4) கங்குலி - 18575
5) தோனி - 17266
6) சேவாக் - 17253
7) ரோஹித் சர்மா - 17014
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










