» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவிப்பு : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

வெள்ளி 10, மார்ச் 2023 5:11:24 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில், இன்று (மார்ச் 10) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 170 பந்துகளில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில், 18 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல, ஏற்கனவே சதம் அடித்திருந்த கவாஜா 150 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடினார். அவர் 180 ரன்களுக்கு அக்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.


பின்னர், களமிறங்கிய அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமலும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின், ஜோடி சேர்ந்த நாதன் லயன் மற்றும் டோட் முர்பி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தனர். இருப்பினும் முர்பி 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து நாதன் லயன் 34 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory