» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2023: லக்னோ அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்!

செவ்வாய் 7, மார்ச் 2023 5:37:43 PM (IST)



2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் லக்னோ அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனுக்கான புது சீருடையை வெளியிட்டுள்ளது. லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். 2022 இல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்த நிலையில், அவர்கள் இப்போது அடர் நீல நிற நிறத்துக்கு மாறியுள்ளனர்.

புதிய சீருடை வெளியீட்டு விழாவில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உண்டகட், தீபக் ஹூடா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரும் அணியினர் தங்கள் புதிய ஜெர்சியை வெளியிட்டனர். லக்னோ அணி கடந்த ஆண்டு ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ராகுலின் தலைமையின் கீழ் 17 ஆட்டங்களில் ஒன்பதில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory