» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூரியகுமார் யாதவ் சிறப்பான ஆட்டம்: கேன் வில்லியம்சன் பாராட்டு

ஜார்ஜ் | திங்கள் 21, நவம்பர் 2022 10:28:58 AM (IST)



நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சூரியகுமார் யாதவ், மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டர்களும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். நடப்பாண்டில் சூரியகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இது எங்களுடைய சிறந்த ஆட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. சூரிய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது. என் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. சூரியகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.

அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் இன்று சரிவர செயல்படவில்லை. எங்களுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு உத்வேகம் கிடைக்கவில்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்தோம். இதேபோன்று முக்கிய நேரத்தில் பேட்டிங்கில் நான் சோபிக்கவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி வெறுப்பை தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சூரியகுமார் யாதவ் மட்டும் தான் இதற்கு காரணம்.

அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.எங்களுடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். சிறு தவறுகளால் தான் சில சமயம் போட்டியின் முடிவே மாறுகிறது.

சில சமயம் சூரியகுமார் யாதவ் போன்று சிலர் சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்கள். அது நமக்கு தோல்வியை தரலாம்.தற்போது உலகத்தில் சூரிய குமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார் என்று வில்லியம்சன் கூறினார்.இதனைத் தொடர்ந்து பேசிய சூரியகுமார் யாதவ், நாம் பேட்டிங் செய்யும்போது ஹர்திக் பாண்டியா என்னை கடைசி வரை நின்று அதிரடியாக விளையாடும் படி கூறினார். நான் களத்தில் நின்று விளையாடும் போது மகிழ்ச்சியான மனநிலையில் நின்று விளையாடினேன்.

இது பயிற்சி செய்யும் போது தான் உங்களுக்கு கிடைக்கும். மழை பெய்த நிலையிலும் 20 ஓவர்கள் முழுமையாக விளையாட முடிந்தது நினைத்து சந்தோஷப்படுகிறேன். எங்களுடைய திட்டம் இன்று வெற்றியடைந்தது. எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று சூரிய குமார் யாதவ் கூறினார்.இன்றைய ஆட்டநாயகன் விருது சூரியகுமாருக்கு கிடைத்தது . நடப்பாண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அவர் வெல்லும் ஏழாவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory