» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒன்டே, டி-20 தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு...!

செவ்வாய் 15, நவம்பர் 2022 10:36:39 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read - ஐபிஎல் மினி ஏலம்: டெல்லி அணியிடமிருந்து முக்கிய ஆல்-ரவுண்டரை வாங்கிய கொல்கத்தா..!
மேலும், இந்திய அணியின் ஹிருஷிகேஷ் கனிட்கர் (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்), முனிஷ் பாலி (பீல்டிங் பயிற்சியாளர்) மூவரும் நியூசிலாந்தில் லட்சுமணனுக்கு உதவுவார்கள்" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்ட் டிரெண்ட் பவுல்ட்டுக்கு இடம் இல்லை.

நியூசிலாந்து டி20 அணி:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கெல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சவுதி, பிளெய்ர் டிக்னெர்.

நியூசிலாந்து ஒருநாள் அணி:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சவுதி.

இந்திய டி20 அணி:-

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

இந்திய ஒருநாள் அணி:-

ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory