» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை!!

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 5:49:42 PM (IST)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது டி20யையும் டி20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. லாடர்ஹில்லில் நடைபெற்ற 5-வது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். 

ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

டி20 தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாகவும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.  5-வது டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுபோல எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இதுவே முதல்முறை. இதன்மூலம் பிஷ்னாய், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory