» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அதிரடி: முதல் டி20யில் வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தியது இந்திய அணி!

சனி 30, ஜூலை 2022 11:39:24 AM (IST)



மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரோபாவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்களும் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தார்கள். 

16-வது ஓவரின் முடிவில் ஜடேஜா ஆட்டமிழந்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதன்பிறகு தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் நல்ல ஸ்கோரை அடைந்தது. பின்னர் விளையாடிய மே.இ. தீவுகள் அணியில் ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருதை தினேஷ் கார்த்திக் வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory