» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:40:29 PM (IST)

இந்திய அணிக்கு  3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கடைசியாகக் கடந்த 2019-இல் விளையாடிய டுவான் ஆலிவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட முக்கியப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்க்கியா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

அணி வீரர்கள் விபரம் : டீன் எல்கர் (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, எய்டன் மார்கிரம், வியான் முல்டர், அன்ரிச் நோர்க்கியா, கீகன் பீட்டர்சன், ராசி வாண்டர் டுசன், கைல் வெர்ரீன், மார்கோ ஜான்சென், கிளென் ஸ்டர்மேன், பிரேனலன் சுப்ராயென், சிசண்டா மகலா, ரியான் ரிக்கெல்டன், டுவான் ஆலிவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory