» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் 50 வெற்றிகள்: விராட் கோலிக்கு பிசிசிஐ வாழ்த்து!

செவ்வாய் 7, டிசம்பர் 2021 12:29:53 PM (IST)



சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் 50 வெற்றிகள் பெற்றதற்கு பி.சி.சி.ஐ. விராட் கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory