» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்

திங்கள் 6, டிசம்பர் 2021 12:24:29 PM (IST)

காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. டி-20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். 

இதையடுத்து ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும் டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory