» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவின் 22வது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் : திவ்யா தேஷ்முக் சாதனை

வெள்ளி 15, அக்டோபர் 2021 12:27:21 PM (IST)இந்தியாவின்  திவ்யா தேஷ்முக், 17.7 சர்வதேச செஸ் புள்ளிகள் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். 

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்த செஸ் தொடரில் இந்தியாவின்  திவ்யா தேஷ்முக் நாட்டின்  22வது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் என்னும் பெருமையை பெற்றுள்ளார். 16 வயதான  திவ்யா தேஷ்முக் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.

செஸ் போட்டிகளில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மிக உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் இந்த தகுதியை பெற ஒருவர் 2500 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற வேண்டும் . அதே போல் பெண்கள் பிரிவில்  இந்த தகுதியை பெற ஒருவர் 2300 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற வேண்டும். இந்தியாவின்  திவ்யா தேஷ்முக் புடாபெஸ்டில் நடந்த செஸ் தொடரில் 2452 புள்ளியை எட்டினார் . அது மட்டுமின்றி 17.7 சர்வதேச செஸ் புள்ளிகள் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டர் என்னும்  பெருமையையும் பெற்றுள்ளார். 

இது குறித்து  திவ்யா தேஷ்முக் கூறியதாவது : பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சர்வதேச செஸ் மாஸ்டருக்கான விதிமுறைகளை நிறைவு செய்துள்ளேன் . கரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல மாதங்களாக சர்வதேச செஸ் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தேன். 19 மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் தொடர்களில் மேலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory