» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : நேபாளத்துன் இந்திய அணி நாளை மோதல்!

வெள்ளி 15, அக்டோபர் 2021 12:23:18 PM (IST)

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் நாளை (16 ஆம் தேதி) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

வங்காளதேச அணியுடன் நடந்த முதல் போட்டியும்  இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது போட்டியும்  சமனில் முடிந்த நிலையில் நேபாள அணியுடன் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில்  நடப்பு சாம்பியன் மாலத்தீவு அணியை நேற்று  எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு  அணியை வீழ்த்தியது.ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்வீர் சிங்க் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக மாலத்தீவு அணி வீரர் அலி அஷஃபாக்  45வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு  அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நாளை 16 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory