» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெர்குஷன் அபாரம் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா: ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!!

வெள்ளி 8, அக்டோபர் 2021 10:16:28 AM (IST)
ஐபிஎல் டி20 போட்டியின் 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்க்ததா நைட் ரைடர்ஸ் அணி.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 54-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது . 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி பெர்குஷன், ஷவம் மாவி, வருண் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் 0.587 ஆக இருக்கிறது. ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றை கொல்கத்தா அணி உறுதி செய்துவிட்டது என்றாலும் இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அதை முடிவு செய்யும்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிரமாண்ட வெற்றி தேவை. அதாவது முதலில் பேட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதன்பின் பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை 80 ரன்களில் சுருட்ட வேண்டும். இவை நடந்தால் நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவை மிஞ்சி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். ஒருவேளை டாஸில் மும்பை அணி தோற்று சேஸிங் செய்தாலே ப்ளே ஆஃப் சுற்று கொல்கத்தாவுக்கு உறுதியாகிவிடும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory