» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜஸ்தானை பந்தாடியது மும்பை: ரோஹித் சர்மா புதிய மைல்கல்

புதன் 6, அக்டோபர் 2021 10:33:57 AM (IST)ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆடினர். என்றாலும் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். எவின் லீவிஸ் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ராஜஸ்தான் ஸ்கோர் 5.3 ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (3), ஷிவம் டுபே (4) ஆகியோரை நீஷம் வெளியேற்ற, க்ளென் பிலிப்ஸை (4) கவுல்டர்-நைல் வெளியேற்றினார். இதனால் 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, கவுல்டர்-நைல், நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களே அடிக்க முடிந்தது. நீஷம் 4 ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்புரா 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச மற்றும் லீக் உள்ளிட்ட டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory