» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி மந்தமான பேட்டிங்: சிஎஸ்கேவை தொடர்ந்து 4-வது முறையாக வீழ்த்திய டெல்லி அணி

செவ்வாய் 5, அக்டோபர் 2021 12:06:29 PM (IST)ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

துபாயில்  நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ராயுடு 55 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 18 ரன்கள் எடுத்தார் தோனி. இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் தில்லி அணி, புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் தோனியின் நிதானமான, தடுமாற்றமான பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தோனிக்குப் பதிலாக ஜடேஜா முன்பே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே அணி இன்னும் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புண்டு எனப் பலரும் கருதுகிறார்கள். இதுபற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது: துபை ஆடுகளத்தில் தோனி மட்டும் தடுமாறவில்லை. இயல்பாக ரன்கள் அடித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்தது. 

136 ரன்கள் எடுத்தது கிட்டத்தட்ட வெற்றிக்குப் போதுமான இருந்த நிலையில் பெரிய ஷாட்களை அடிப்பதில் சிரமம் இருந்தது. இன்னிங்ஸின் கடைசிக்கட்டத்தில் இரு அணிகளாலும் ரன்கள் எடுக்க தடுமாற்றம் இருந்தது. 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்ததால் இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 150 ரன்கள் எடுக்க இருந்தோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் தில்லி அணியினர் நன்றாகப் பந்து வீசினார்கள். எனவே எளிதாக ரன்கள் எடுக்க முடியவில்லை என்றார். 

சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள், 4 தோல்விகள், என 18 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. இரு அணிகளுக்கும் இன்னும் தலா ஒரு போட்டி இருப்பதால், இரு அணிகளும் வெற்றி பெற்றால், டெல்லி முதலிடத்தைப் பிடிக்கும், ஒருவேளை டெல்லி தோற்று சிஎஸ்கே கடைசிப் போட்டியில் வென்றால், முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்.

சிஎஸ்கே அணியின் கடந்த 3 போட்டிகளில் சொதப்பி வருகிறது. கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது, அடைத் தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் 180 ரன்களுக்குமேல் அடித்தபோதிலும், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்கள் பேட்டிங்கில் வெளுத்துவாங்கி எளிதாக சேஸ் செய்தனர். இந்தப் போட்டியிலும் சிஎஸ்கே தோற்றுள்ளது. ஆதலால், சிஎஸ்கே அணி இந்த இரு தோல்விகள் குறித்து சுயஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தொடர்ந்து 4-வது முறையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory