» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலகக் கோப்பையில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி: ஐசிசி அறிவிப்பு

திங்கள் 4, அக்டோபர் 2021 5:35:30 PM (IST)டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.  

இந்நிலையில் டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஓரளவுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அபுதாபி மைதானத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படும் என அறியப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory