» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராகுல், ஷாருக்கான் அதிரடி : கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

சனி 2, அக்டோபர் 2021 11:30:52 AM (IST)கே.எல்.ராகுல், ஷாருக்கானின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.  சுப்மான் கில் 7 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். 

ஐயர்-திரிபாதி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் திரிபாதி 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். 49 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்டரிகள் 1 சிக்சர்கருடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் ராணாவும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 

166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. அகர்வால், ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்கள் வரை ராகுல் நிதானமான ஆட்டத்தையே கையாண்டார், அகர்வால் அதிரடி ஆட்டத்தை கையாண்டு சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் அகர்வால் 31 ரன்கள் சேர்த்திருந்தார்.

அரைசதத்த நோக்கி முன்னேறிய அகர்வால் 40 ரன்னில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த பூரன் 12 ரன்னில் வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். மார்க்ரம் பெரிதாக ரன் அடிக்கவில்லை என்றாலும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ராகுலுக்கு வழங்கினார். ராகுலின் நிதான ஆட்டத்தால் ஸ்கோர் 100 ரன்களை 13 ஓவர்களில் எட்டியது. ராகுல் 43 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ராகுல் அரைசதத்தை எட்டியபோது 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்தார்.

நிதானமாக பேட் செய்துவந்த மார்க்கரம் 18 ரன்னில் நரேன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த தீபக் ஹூடாவும் 2ரன்னில் ஏமாற்றினார். அடுத்துவந்த தமிழக வீரர் ஷாருக்கான், ராகுலுடன் சேர்ந்தார். தான் சந்தித்த 2-வது பந்திலேயே ஷிவம் மாவி பந்துவீச்சில் லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.

சவுதி வீசிய 18-வது ஓவரில் ஷாருக்கான் அடித்த பவுண்டரி உள்ளிட்ட 9 ரன்ளகளை பஞ்சாப் அணி சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடிய தமிழக வீரர் ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்கள்(ஒருபவுண்டரி, 2சிக்ஸர்கள்) ஆலன் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். 19.3 ஓவர்களில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வருண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் இரு போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானவை.

ஒரு அணியின் வெற்றியும், தோல்வி மற்றொரு அணிக்கு சாதகமாக அமையும் என்பதால், 4-வது இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியால், டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு அடுத்தார்போல் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்த 2-வது அணியாக டெல்லி கேபிடல்ஸ் மாறியுள்ளது.

ஆனால், புள்ளிகளின் அடிப்படையில் எந்த இடம் என்பது இனிவரும் போட்டிகளில் முடிவாகும். ஆர்சிபி அணிக்கும், டெல்லி அணிக்கும் இன்னும் தலா 3 போட்டிகள் இருப்பதால், அதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் 2-வது மற்றும் 3-வது இடம் முடிவாகும். கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு அணியில் சக வீரர் என்பதைவிட, கேப்டன் என்ற மேலாண்மை பணி மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சீசனில் மோர்கன் மொத்தமே 109 ரன்கள்தான் அடித்துள்ளார், அதில் ஒருபோட்டியில் 47 ரன்கள் அடித்துள்ளார். 12 போட்டிகில் மோர்கனின் சராசரி 10 ரன்கள் என்ற வீதத்தில்தான் இருக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory