» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே: வெளியேறியது ஹைதராபாத்!

வெள்ளி 1, அக்டோபர் 2021 11:06:56 AM (IST)ஐ.பி.எல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ், முதல்அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும் விமர்சனங்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை தக்க பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். 

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டோனி கூறியதாவது:- கடந்த ஆண்டு  முதல்முறையாக  பிளே ஆப் சுற்றுக்குள்  செல்லாமல்  வெளியேறினோம்.  அப்போது அடுத்தமுறை வலுவாக திரும்பி வர வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றார்போல் வலுவாக திரும்பி வந்துள்ளோம்.இந்த வெற்றிக்கு முழுமையாக அணி வீரர்கள்தான்காரணம். 

இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ்  ஆகவில்லை. குறிப்பாக முழங்காலுக்கும் கீழே பந்து தாழ்வாக வந்தது.  இதனால் வழக்கமான ஆடுகளத்தைவிட பேட்ஸ்மேன் நேராக அடித்து ஆட வசதியாக இருந்தது. எங்களின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கிறது.  சமநிலையுடன் அணி இருப்பது சிறப்பாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ரசிகர்களைப் பற்றி அதிகமாக சொல்லத் தேவையில்லை. எங்களின் வெற்றியிலும், கடினமான காலத்திலும் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். அந்த நம்பிக்கையை  காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory