» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2019ம் ஆண்டு உலகக் கோப்பை நினைவிருக்கிறதா? அஸ்வினுக்கு ஆதராக சேவாக் கருத்து

வியாழன் 30, செப்டம்பர் 2021 3:30:31 PM (IST)மோர்கன் - அஸ்வின் மோதல் விவகாரம் தொடர்பாக  அஸ்வினுக்கு ஆதராக சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மோர்கன், அஸ்வின், டிம் சவுதி இடையிலான வார்த்தை மோதல்தான் பெரும் சர்்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. 

இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார். பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். ஆனால், இந்த மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர்கடைபிடிப்பதில்லை. டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். மோர்கன், அஸ்வின் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்தபின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் " ராகுல் திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிந்தபோது அது ரிஷப் பந்த் உடலில் பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த அஸ்வின், 2-வது ரன்னுக்கு ரிஷப் பந்த்தை அழைத்து ஓடினார்.

ஒரு வீரர் உடலில் பந்துபட்டுவிட்டால், அடுத்த ரன் ஓடக்கூடாது என்று கிரிக்கெட்டில் எழுதப்படாத மரபு, கிரிக்கெட்டின் தார்மீகப்படி ஓடமாட்டார்கள். ஆனால், அஸ்வின் 2-வது ரன் ஓடியதை மோர்கன் வரவேற்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.இது கிரிக்கெட் விதிகளில் கூறப்படவில்லை என்றாலும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதுபற்றி விவாதித்தால் பலசுவாரஸ்யங்களைப் பேசலாம்.” எனத் தெரிவித்தார். மோர்கனுக்கு ஆதரவாக ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்னும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 14-ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆட்டத்தை நினைவுபடுத்தி சேவாக் கடுைமயாகச் சாடியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிரன்ட் போல்ட் வீசிய ஓவரில் மார்டின் கப்தில் பந்தை பீல்டிங் செய்து ரன் அவுட் செய்ய எறிந்தார்

அப்ோபது பந்து பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பவுண்டரிக்குச் சென்றுவிடும். இதைப் பார்த்த நடுவர் தர்மசேனா, 6 ரன்களை வழங்குவார். இந்த 6 ரன்களால்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது. பேட்ஸ்மேன் உடலில்பட்டாலோ அல்லது பேட்டில்பந்து பட்டாலோ மேற்கொண்டு ரன் ஓடக்கூடாது என்பது மரபு ஆனாலும் விதிகளில் இல்லை. இதைச்சுட்டிக்காட்டி சேவாக் ட்விட்டரில் மோர்கனைச்சாடியுள்ளார்.

சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் "2019, ஜூலை14ம் தேதி நினைவிருக்கா உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு 6 ரன்கள் சென்றது. இது தார்மீகத்தை மீறியது இல்லையா. தீர்மீகத்தை மீறிவிட்டோம் என்பதற்காக மோர்கன் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று லாட்ர்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்ணா செய்தாரா. நியூஸிலாந்து உலகக் கோப்பையை வென்றுவிட்டதா?. அதை யாரும் பாராட்டவில்லையே” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory