» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கேப்டன் பதவிக்கு தகுதியானவர் ரோகித் சர்மா : கவாஸ்கர் கருத்து

புதன் 29, செப்டம்பர் 2021 4:16:16 PM (IST)அடுத்த இரண்டு உலக கோப்பை தொடர்களுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி-20 கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில்  இருந்து விராட் கோலி விலக உள்ள நிலையில் அவருக்கு அடுத்து ரோகித் சர்மா தான் அந்த இடத்திற்கு பொறுத்தமானவராக இருப்பார் என்றும இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை துணை கேப்டன்களாக நியமிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ரோகித்  சர்மா தான் அடுத்த 2 உலக கோப்பை தொடர்களுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும். ஸ்மார்ட்டாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர் ரிஷப் பண்ட். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு தக்க சமயங்களில் முடிவுகளை எடுத்து வரும் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்பட தகுதியானவர்.அதை போல கே எல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி செல்வதால் அவரையும் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory