» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை - கொல்கத்தா அணிகள் வெற்றி: ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மாற்றம்

புதன் 29, செப்டம்பர் 2021 11:29:21 AM (IST)ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அபுதாபியில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது. மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். பும்ரா, பொலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. செளரப் திவாரி 45 ரன்களும் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார்கள்.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தில்லியை கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு ஆட்டங்களாலும் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை அணி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 4-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 5-ம் இடத்தில் இருந்த பஞ்சாப் 6-ம் இடத்துக்கும் 6-ம் இடத்தில் இருந்த ராஜஸ்தான் 7-ம் இடத்துக்கும் இறங்கியுள்ளன.

புள்ளிகள் பட்டியல்
#Rank அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
1. சென்னை 10 8 2 16 +1.069
2. தில்லி 11 8 3 16 +0.562
3. பெங்களூர் 10 6 4 12 -0.359
4. கொல்கத்தா 11 5 6 10 +0.363
5. மும்பை 11 5 6 10 -0.453
6. பஞ்சாப் 11 4 7 8 -0.288
7. ராஜஸ்தான் 10 4 6 8 -0.369
8. ஹைதராபாத் 10 2 8 4 -0.501


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory